உள்ளூர் செய்திகள்
மெட்ரோ ரெயில்

திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

Published On 2022-03-13 06:25 GMT   |   Update On 2022-03-13 06:25 GMT
மெட்ரோ ரெயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இம்மாதம் இறுதி வரை பயணிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு வழித்தடங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் மூலம் விரிவாக்கம் திட்டம் தொடங்கி 54.41 கி.மீ தூரம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரெயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இம்மாதம் இறுதி வரை பயணிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்
Tags:    

Similar News