உள்ளூர் செய்திகள்
ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
புதுக்குப்பம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்றார்.
புதுச்சேரி:
புதுவை அரசு வன விலங்கு பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பில் மணவெளி தொகுதி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொரித்து அந்த ஆமை குஞ்சுகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் புதுக்குப்பம் கடலில் விட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி, துணை இயக்குனர் குமரவேல், பிரபாகரன், வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், கிருஷ்ண சாமி, தணிகைவேல் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகம், ரமேஷ், அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.