உள்ளூர் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிலநாட்களுக்கு முன்பு 14வயதுடைய சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் 7ம்வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது அரசக்குளத்தை சேர்ந்த கோபிநாதன்(32) என்பவருக்கும், சிறுமிக்கும் சட்டவிரோதமாக திருமணம் நடந்துள்ளது. இதில் அந்தசிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது-.
இதுகுறித்து அருப்புக் கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோபிநாதன், அவரது பெற் றோர் பொன்ராம்&லட்சுமி, உறவினர்கள் வேலுச்சாமி, அழகரக்காள் ஆகிய 5பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.