உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்து பயிற்சி

Published On 2022-03-12 16:01 IST   |   Update On 2022-03-12 16:01:00 IST
அரியலூரில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் அருகேயுள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு  இயக்கத்தின் சார்பில் பருத்தி  சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  

பயிற்சியில் மாவட்ட வேளாண்  இணைஇயக்குநர் பழனிச்சாமி  தலைமை வகித்து பேசினார்.  கிரீடு வேளாண் அறிவியல்மைய பூச்சியியல் துறை வல்லூநர் அசோக்குமார், பருத்தி ஆராய்ச்சி நிலையதொழில் நுட்பவல்லுநர் பவித்ரா ஆகியோர் கலந்துகொண்டு பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கல் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி அளித்தனர். 

மேலும்  இப்பயற்சியில், களைநிர்வாகம்,  ஒருங் கிணைந்த பூச்சி நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரியலூர் வேளாண்மை துணை இயக்குநர் சண்முகம், உதவி இயக்குநர்கள்சாந்தி, ராதாகிருஷ்ணன் (தர கட்டுபாடு,), வேளாண் அலு வலர்கள் சுகந்தி, 

தமிழ்மணி, துணை அலுவ லர் பால்ஜன்சன், உதவி விதை அலுவலர் கொளஞ்சி, உதவி அலுவலர்கள்லெனின், ராஜகிரி, கமலா, வட்டார தொழில்நுட்பமேலாளர் செந்தில்குமார்  மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News