உள்ளூர் செய்திகள்
வண்ண அருவி கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள காகித சிற்பங்கள்.

காகித சிற்ப கண்காட்சி

Published On 2022-03-12 14:37 IST   |   Update On 2022-03-12 14:37:00 IST
வண்ண அருவி கலைக்கூடத்தில் காகித சிற்ப கண்காட்சி ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை செயின்ட் தெரசா வீதியில் உள்ள வண்ண அருவி கலைக்கூடத்தில் ஓவியர் கிருஷ்ணன் உருவாக் கிய காகித சிற்ப கண்காட்சி  தொடக்கவிழா நடந்தது.

ஓவியர் ஆனந்தராஜ் வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கண் காட்சியை திறந்து வைத்து சிற்பங்களை பார்வையிட்டார். 

கோவை லலித்  கலா ஷேத்ரா கல்லூரி இயக்குனர் ரவிராஜ் வாழ்த்தி பேசினார். புதிய தூரிகைகள் நிறுவனர் ஓவியர் அன்பழகன், கோவை  நுண்கலை கல்லூரி துணை பேராசிரியர் விக்னேஷ்ராஜ் வாழ்த்துரை வழங்கினர். 

ஓவியர் கந்தப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  ஓவியர் கிருஷ்ணன் நன்றி கூறினார். 

கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட காகித சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. குப்பைக்கு செல்லும் வீணான  காகிதங்களை கொண்டு புதுமையான அழகிய சிற்பங்களை கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.

பள்ளி, கல்லூரி, பொதுநல அமைப்பினர், பெண்கள், திருநங்கைகளுக்கும் இக்கலையை இலவசமாக கற்றுத்தருகிறார். இவரது ஓவியங்கள் கலெக்டர் அலுவலகம், கல்வித்துறை,  நலவழித்துறை, கவர்னர் மாளிகை என பல இடங்களில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News