உள்ளூர் செய்திகள்
வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் சிறந்த விவசாய பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட காட்சி.

பெண் விவசாயிகள் கவுரவிக்கும் விழா

Published On 2022-03-10 11:05 IST   |   Update On 2022-03-10 11:05:00 IST
தவளக்குப்பம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெண் விவசாயிகளை கவுரவிக்கும் விழா நடந்தது.
புதுச்சேரி:

 புதுவை  தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக பெண்கள்   தினத்தை முன்னிட்டு பெண் விவசாயிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவிற்கு பூரணாங்குப்பம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஜெயதுர்கா  தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் முன்னிலை வகித்தார். 

கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். விழாவில் தவளக்குப்பம், நல்லவாடு, ஆண்டியார் பாளையம், பூரணாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த சிறந்த விவசாய  பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 

விழாவில் அக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பல கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்த விழாவில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண் விவசாயிகள்,   அக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
விழாவின் முடிவில்  கல்லூரி உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.

Similar News