உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர் களின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழா
பள்ளி மாணவர் களின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை சார்பில் தனியார் வங்கி உதவியுடன் பள்ளி மாணவர் களின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழா கவர்னர் மாளிகையில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் கவர்னர் தமிழிசை இணையதள சேவையை தொடங்கி வைத்தார். கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.
இணையதள பதிவை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&
இந்தியாவிலேயே முதன் முறையாக புதுவையில் இந்த இணைய சேவை தொடங்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சுதாதாரத்துறை, கல்வித்துறை, வங்கி நிறுவனத்தை மனதார பாராட்டுகிறேன்.
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர் களின் சுகாதாரம் குறித்த விபரங்களை நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு ஏற்கனவே வைத்திருந்தேன்.
இது ஒரு மிகப்பெரிய கனவு திட்டம். அது இப்போது நடந்தேறியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. சுகாதார அமைப்புகளின் அறிக்கைப்படி உலகில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் அவர்கள் வளரும்போது அவற்றை சரி செய்ய சுகாதாரப் பதிவு உதவியாக இருக்கும். பெரும்பாலான நோய்களுக்கு காரணம் தொடக்க நிலையிலேயே ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யப்படாததுதான்.
அனைத்து குழந்தை களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வி பதிவேடு பராமரிக்கப் படுவதைப் போலவே சுகாதார பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும். பிரதமர் ஸ்வச் பாரத் இயக்கம் பற்றி கூறியபோது சுத்தம் செய்யும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டது.
அதன்பிறகு நோய்த்தொற்று பெருமளவு குறைந்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து இருக்கிறது. இதுதான் ஸ்வச் பாரத் திட்டத்தின் பலன். ஊட்டச் சத்து குறை பாட்டை சரி செய்ய கவனம் செலுத்தினால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கும், கல்வியில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.
எல்லா தரவுகளும் கணினி மயமாக்கப்படுவதை பிரதமர் வலியுறுத்துகிறார். அதற்காக இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற் காக சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறையைப் பாராட்டுகிறேன். குழந்தை களும் ஆரோக்கி யமாகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல முறை யில் கல்வி பெற வேண்டும்.
விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பிட்ட காலத்திற்குள் புதுவையில் உள்ள அனைத்து குழந்தை களின் சுகாதாரப் பதிவும் பதிவேற்றம் செய்யப்
பட வேண்டும். இதில் அங்கன்வாடி குழந்தைகளை யும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யும் போது தாய்மார்கள் இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முடியும். இந்த திட்டம் பல்கலைக்கழகத்துக்கும் விரிவுபடுத்தப்படும்.
புதுவையில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளின் சுகாதார குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். உடல்நலன் குறித்த தகவல் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தினால் உடனடியாக அனைத்து விபரங்களும் கிடைக்கும்.
குழந்தைகளின் இதய பிரச்சினை, ஊட்டச்சத்து, பார்வை, கேட்கும் திறன் கண்டறிந்து சரிசெய்ய முடியும். எந்த பரிசோதனை செய்யப்பட்டாலும், அதன் விபரங்கள் பதிவு செய்யப்படும். குறைபாடு உள்ள குழந்தை கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.
புதுவையில் குழந்தை பெற்ற பெண்களுக்கு பரிசு பெட்டகம் தர முதல்& அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.மாணவர் களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான புதுவையை உருவாக்கலாம்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.