உள்ளூர் செய்திகள்
8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 608 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்காலில் 6, மாகியில் 2 பேர் என 8 பேர் தொற்று டன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 2, காரைக் காலில் 3 பேர் என 5 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆ யிரத்து 756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 765 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 10, காரைக்காலில் 12, மாகியில் 4 பேர் என 26 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத் தில் இப்போது 29 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 99 ஆயிரத்து 515 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.