உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ரூ.500 நோட்டுகளை வாங்க மறுக்கும் மக்கள்

Published On 2022-03-09 14:42 IST   |   Update On 2022-03-09 14:42:00 IST
மதுக்கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலால் ரூ.500 நோட்டுகளை வாங்க மக்கள் மறுக்கிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை பிள்ளைத் தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(24) பெயிண்டர்.

இவரின் நண்பர் புது சாரம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மனோஜ்(29). இருவரும் திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுபான கடையில் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கினர். 

அந்த நோட்டு கள்ள நோட்டு என்பதால் கடை மேலாளர் பிரபாகரன், உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஜெயபால், மனோஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரும்பார்த்தபுரம் ஆட்டோ டிரைவர் சரண் என்பவரிடம் கள்ள நோட்டு வாங்கியது தெரியவந்தது. 

சரணை கைது செய்து விசாரித்த போது, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன்கமல் (31) என்பவரிடம் கள்ளநோட்டு வாங்கி புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மோகன் கமல் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மோகன் கமல் சென்னையில் ஒரு கும்பலிடம் ரூ.10 ஆயிரத் துக்கு ரூ.50 ஆயிரம் என்ற விகிதத்தில் ரூ.4 லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை வாங்கியுள்ளார்.

இதை ரூ.20 ஆயிரத்துக்கு ரூ.50 ஆயிரம் என புதுவையில் புழக்கத்தில் விட்டுள்ளார் என தெரிய வந்தது. போலீசார் இவர்களிடமிருந்து 483 கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

4 மாதத்துக்கும் மேலாக கள்ள நோட்டுக்கள் புதுவையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகளில் கூட்டம் அதிகமான நேரத்தை பயன்படுத்தி நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். 

இதனால் சுமார் ரூ.1 கோடி வரை புதுவையில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர். சென்னையில் கள்ள நோட்டுகளை கொடுத்த கும்பல் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். 

கள்ளநோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் புதுவைக்கு வர உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

புதுவை முழுவதும் ரூ.500 கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக பார்த்து நோட்டுக்களை வாங்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி யுள்ளனர். இந்த சம்பவத்தால் மதுபான கடை உரிமையாளர்கள் தங்களிடம் வந்துள்ள ரூ.500 நோட்டுகளை சரிபார்த்து வருகின்றனர். 

தங்கள் கடைகளில் ரூ.500 நோட்டு கொடுத்தால் அதை கவனமாக பார்த்து வாங்கும்படி ஊழியர்களுக்கும் அறிவுறுத் தியுள்ளனர். பெட்ரோல் பங்குகளிலும் ரூ.500 நோட்டுகளை சரிபார்த்து வாங்க உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
இதனால் ரூ.500 நோட்டு களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் அச்ச மடைந்துள்ளனர்.

Similar News