உள்ளூர் செய்திகள்
தவளக்குப்பத்தில் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கான பயிர்காப்பீடு பதிவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

Published On 2022-03-09 14:37 IST   |   Update On 2022-03-09 14:37:00 IST
தவளக்குப்பத்தில் 102 விவசாயிகளுக்கு நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:

தவளக்குப்பம் உழவர் உதவியகத்தில், சம்பா நெல் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு “எனது காப்பீடு எனது கையில்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  உழவர் உதவியக வேளாண் அலுவலர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். புதுவை  கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி விளக்கினார்.நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் மூத்த கோட்ட மேளாலர் மோகன் பயிர் காப்பீட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.

சிறப்பு  விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021&22ம் ஆண்டு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள 102 விவசாயிகளுக்கு நெற்பயிர்க்கான பயிர்காப்பீடு பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிகாந்தன், சக்திபாலன், உழவரக களப்பணியாளர் மாசிலாமணி பலர் கலந்து கொண்டனர். 

இம்முகாமில் தவளக்குப்பம், பூரணாங்குப்பம், மணவெளி, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல்பயிர் பாதிப்பு காலத்தில் சுமார் 250 ஏக்கர் நில விவசாயிகள் பயன்பெறுவர். ஒரு ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.27ஆயிரம் பெற முடியும் என கூறப்படுகிறது.

Similar News