உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.

உலக மகளிர் தின விழா-நமச்சிவாயம் பங்கேற்பு

Published On 2022-03-09 14:28 IST   |   Update On 2022-03-09 14:28:00 IST
கூனிச்சம்பட்டில் உலக மகளிர் தின விழாவில் கலந்து அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:

திருக்கனூர்  அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில்  உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுவை  பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்  மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. 

புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர்  ஜாகிர் உசேன் வரவேற்றார்.   வேளாண் துறை இயக்குனர் பால காந்தி முன்னிலை வகித்தார். தொகுதி  எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மகளிர் செய்திருந்த உணவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. அதனை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டு  சிறந்த உணவு பொருட்களை தயாரித்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில்  ஏராளமான பொதுமக்கள், வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்களை அமைச்சர் நமச்சிவாயம்  சந்தித்தார். அவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதுகுறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News