உள்ளூர் செய்திகள்
கால்நடைகளுக்கு இறங்கு தளம் அமைக்கும் பணியை வைத்திலிங்கம் எம்.பி., அங்காளன் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து

கால்நடைகளுக்கு இறங்கு தளம்-வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2022-03-09 14:22 IST   |   Update On 2022-03-09 14:22:00 IST
மதகடிப்பட்டு வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு இறங்கு தளம் அமைக்கும் பணியை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் 4 லட்சத்து 80 ஆயிரம் செலவில்  மதகடிப் பட்டு வாரச்சந்தையில் கால்நடை மற்றும் பொது மக்களுக்கு கூடுதல் வசதி செய்தல் பணியின் கீழ் கால்நடைகளுக்கு இறங்கு தளம் அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில்,   
வைத்திலிங்கம் எம்.பி., அங்காளன் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து  பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இள நிலை பொறியாளர் மனோ கரன், பாஸ்கர்  மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

Similar News