உள்ளூர் செய்திகள்
கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஏழைகளுக்கு வேட்டி-சேலைகளை வழங்கிய காட்சி.

ஏழை பெண்களுக்கு சேலை-அன்பழகன் வழங்கினார்

Published On 2022-03-08 10:13 IST   |   Update On 2022-03-08 10:13:00 IST
லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
புதுச்சேரி:

லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 74-வது பிறந்த நாள்விழா மற்றும் நலத்திட்ட  உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. இணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். கிழக்கு  மாநில செயலாளர் அன்பழகன்  அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 300-க்கும் மேற்பட்ட  ஏழை-எளியோருக்கு வேட்டி, சேலை, சர்க்கரை வழங்கி பேசியதாவது:-

லாஸ்பேட்டை  தொகுதி மக்கள் தங்களால் தேர்வு செய்யப்பட்டவரை எண்ணிப்பார்க்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை வழங்கும் அன்பானந்தம் 30 ஆண்டு காலமாக கட்சி மாறாமல் ஒரே கட்சியிலேயே உள்ளார். 

தற்போது தேர்வு செய்தவர் 5 ஆண்டு ஒரு கட்சி, அடுத்து 5 ஆண்டு ஒரு கட்சி என உள்ளார். அவரையும் நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்.  அடுத்து எந்த கட்சியில் நிற்பார் என்பதும் தெரியாது. 

அ.தி.மு.க. இணை செயலாளர் அன்பானந்தத்திற்கு எம்.எல்.ஏ.வாக வர கூடிய அனைத்து தகுதியும் உள்ளது. அவர் எம்.எல்.ஏ.வாக வருவதற்கு நான் துணையாக இருப்பேன். ஆனால் மக்களாகி நீங்கள் தான் அவருக்கு ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில அமைப்பு சார ஓட்டுநர் அணித் தலைவர் ஜெயக்குமார், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சண்முகம்,  மாநில வர்த்தக அணி துணைச் செயலளார் செல்வராஜி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சரவணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர்கள் அபிஷேக், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News