உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

Published On 2022-03-08 10:05 IST   |   Update On 2022-03-08 10:05:00 IST
பாகூரில் குடிபோதையில் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

பாகூர் மேற்கு வீதியில் ஒரு தேசிய வங்கி அருகே 2 பேர் குடிபோதையில் அவ்வழியே சென்ற பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ   இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாகூர் பங்களா வீதியை சேர்ந்த கார்முகில் மற்றும் பாகூர் வடக்கு வீதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் ஒரு திருமண மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ஒருவர் ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து சென்ற வில்லியனூர் போலீசார் ரகளை செய்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் சுல்தான்பேட்டை களார் தெருவை சேர்ந்த யாசின் (வயது37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News