உள்ளூர் செய்திகள்
மாணவர்களிடம் செல்வகணபதி எம்.பி. நலம் விசாரிப்பு
உக்ரைனில் இருந்து மாகி திரும்பிய மாணவர்களை செல்வகணபதி எம்.பி. சந்தித்து நலம் விசாரித்தார்.
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்த 27 மாணவர்கள் படிப்புக்காக உக்ரைன் நாட்டுக்கு சென்றனர். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
பெற்றோர்கள், முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி. ஆகியோரை சந்தித்து மாணவர்களை மீட்க வலியுறுத்தினர்.
மத்திய இணை மந்திரி முரளிதரனிடம் மாணவர்களை மீட்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் 15 மாணவர்கள் மீட்கப்பட்டு புதுவை திரும்பி உள்ளனர். அதில் 3 பேர் மாகி பகுதியை சேர்ந்தவர்கள்.
செல்வகணபதி எம்பி. மாகி சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய 2 மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி நலன் விசாரித்தார்.