உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது.
பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர் ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்த உருளையன் பேட்டை போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மாவட்ட உரிமையியல் நீதிபதியை மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட் புறக் கணிப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டன. வக்கீல்கள் மீது கொடுக்கப் படும் புகார்களை சங்க நிர்வாகிகளிடம் ஆலோசிக் காமல் வழக்குப் பதியக் கூடாது என வலியுறுத்தி காவல்துறை உயரதி காரிகளை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.