உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கிய காட்சி.

சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

Published On 2022-03-07 11:15 IST   |   Update On 2022-03-07 11:15:00 IST
சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:

வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலம்பாட்டக் குழு, மற்றும் புதுவை  சிலம்பம் கலை கழகம் இணைந்து நடத்திய சிலம்ப போட்டி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடைபெற்றது.

அதில் 500-க்கும் மேற் பட்ட தமிழகம், புதுவையை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடற்கரை காந்தி திடலில்  பரிசளிப்பு விழா  நடந்தது.   சபாநாயகர் ஏம்பலம் செல்வம்  வீரர்-வீராங்கனை களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.

பின்பு  விளையாட்டு வீரர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாவை பறக்க விட்டு சிறப்பித்தார்.  
வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலம்பாட்டக் குழுவின் நிறுவனர் ராஜ்குமார்  ஒருங்கிணைத்து தலைமை தாங்கினார். தமிழர்களம் அழகர் நிகழ்ச்சியை நெறிபடுத்தி வழி நடத்தினார்.

Similar News