உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கட்டிட தொழிலாளியை தாக்கி கொல்ல முயற்சி

Published On 2022-03-07 11:12 IST   |   Update On 2022-03-07 11:12:00 IST
ஏம்பலத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம் பாக்கத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது33). கட்டிட தொழிலாளி.  இவர் அரும்பார்த்தபுரத்தில் கட்டிட வேலை முடிந்து தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். 

வரும் வழியில் ஏம்பலத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிகளுக்கு பெட்ரோல் நிரப்ப வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த கொத்துக்கா என்ற எழுமலை மற்றும் நல்லாத்தூரை சேர்ந்த வசந்தராஜா உள்பட 3 பேர் ரஜினியின் மோட்டார் சைக்கிள் மீது இடித்தனர்.

இதனை ரஜினி தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்தினர். மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி ரஜினியை தாக்கி கத்தியால் வெட்ட முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட ரஜினி அவர்களிடமிருந்து உயிர் தப்பினார்.

இதுகுறித்து ரஜினி கரிக் கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொத்துக்கா உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News