உள்ளூர் செய்திகள்
பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

நுகர்வோர் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்களுக்கு பயிற்சி

Published On 2022-03-07 11:09 IST   |   Update On 2022-03-07 11:09:00 IST
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
புதுச்சேரி:

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை புதுவை இளைஞர் விடுதியில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர். அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை மற்றும் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசி பயிற்சியை தொடங்கி வைத்தார். 

இந்தியாவில் சமயங்கள் சித்தாந்தங்கள் தலித்தியம், மனித உரிமைகள், மார்க்சியம், தமிழ் தேசியம், திராவிடம் குறித்த தலைப்புகளில் பேராசிரியர்  ஜெரோம் சாம்ராஜ், வக்கீல் பாரதி அண்ணா, ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவாக மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் எதிர்கால திட்டம் செயல்பாடுகள் செய்யவேண்டிய பணிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்,  இன்றைய சூழ்நிலையில் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இளைஞரணி அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

Similar News