உள்ளூர் செய்திகள்
பொது இடத்தில் ரகளை செய்த 16 பேர் கைது
புதுவையில் பல்வேறு இடங்களில் ரகளை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் ஒதியம்பட்டு-திருக்காஞ்சி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் தட்டாஞ் சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி(வயது28) என்பது தெரியவந்தது.இதைதத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது இடத்தில் ரகளை செய்த முத்துலிங்கம்பேட் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த ராஜசேகர்(38) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
தட்டாஞ்சாவடி ஓழுங்கு முறை விற்பனை கூடம் அருகே பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்த சாரம் பகுதியை சேர்ந்த குமார்(40) மற்றும் சக்தி நகர் சேர்ந்த பச்சையப்பன் ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு பகுதியில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய மயிலம் அன்னைநகரை சேர்ந்த ராஜவேலு (38) தென் கோடி பாக்கத்தை சேர்ந்த பாஸ்கர்(35) மற்றும் திண்டிவனம் முருங்கப் பாக்கத்தை சேர்ந்த மூர்த்தி (38) ஆகிய 3 பேரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் மேட்டுப்பாளையத்தில் ஒரு மதுக்கடை அருகே குடித்துவிட்டு ரகளை செய்த ஒதியம்பட்டு கோபி(30), குருமாம்பேட் விக்னேஷ் (30) ஆகிய 2 பேரை மேட்டுபாளையம் போலீசாரும், பூமியான்பேட்டை விக்டோரியாநகர் பூங்காவில் பெண்களை கிண்டல் செய்த பூமியான்பேட் பாவாணர்நகரை சேர்ந்த விமல்(39), முருகன்(42), ரமேஷ் (40) ஆகிய 3 பேரையும் ரெட்டியார்பாளையம் போலீசாரும், மடுகரையில் குடித்துவிட்டு பொதுமக்களிடம் ரகளை செய்த அர்ப்பிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனுசு(40) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும், கரிக்கலாம் பாக்கம் சந்திப்பில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரகுமார், உருவையாறு சந்திப்பில் ரகளை செய்த நந்தம்மேடு பகுதியை சேர்ந்த கண்ணதாசன்(31) ஆகிய 2 பேரை மங்கலம் போலீசாரும் கைது செய்தனர்.