உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெட்ரோல் பங்க் உரிமையாளர் தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-03-06 14:09 IST   |   Update On 2022-03-06 14:09:00 IST
புதுவையில் பெட்ரோல் பங்க் அதிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் அன்பு செழியன் (வயது49) இவர் புதுவை மறைமலையடிகள் சாலையில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நள்ளிரவு அன்புசெழியன் பெட்ரோல் பங்கை பார்வையிட வந்தார். 

அப்போது அங்கு பஸ்சுக்கு டீசல் நிரப்ப வந்த டிரைவரிட ம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அன்புச்செழியன் தட்டிக்கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அன்புச்செழியனை தகாதவார்த்தைகளால் திட்டி சராமாரியாக தாக்கினார்கள். இதனை தடுக்க வந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகரையும் அவர்கள் தாக்கினர். 

அதோடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் அன்புச்செழியனை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த தாக்கு தலில் காயமடைந்த அன்புச் செழியன் மற்றும் ராஜசேகர் இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

 பின்னர் இது குறித்து அன்புச்செழியன் உருளையன் பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பெட்ரோல் பங்க் அதிபர் அன்புச்செழியன் மற்றும் ஊழியர் ராஜசேகரை தாக்கி யவர்கள் நாவற்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (28) மற்றும் முத்தியால் பேட்டையை சேர்ந்த செந்தில் நாயகம் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

Similar News