உள்ளூர் செய்திகள்
சிந்தனையாளர் பேரவை சார்பில் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடந்த காட்சி.

அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்

Published On 2022-03-06 09:47 IST   |   Update On 2022-03-06 09:47:00 IST
வயது வரம்பை தளர்த்தி அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவையின் 108-வது சிந்தனை அரங்கம்& கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்  புதுவை ஜோதி கண் மருத்துவமனையில் நடைபெற்றது. பேரவை இணை செயலாளர் நாகராஜ் வரவேற்றார். பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவுசல்யா தேவி, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், ஜோதி கண்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன், பேரவை நிர்வாகிகள் வீரசேகரன், தேவிதிருவளவன், ராஜா ராம், இளமுருகன், சசிகுமார், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும், புதுவை அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். புதுவையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உள்பட அரசு பணியிடங்களை வயது வரம்மை தளர்த்தி நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News