உள்ளூர் செய்திகள்
திறன் மேம்பாட்டு கழக பயிற்சி நிறுவன தொடக்க விழா
மயிலம் கல்வி குழுமத்தில் திறன் மேம்பாட்டு கழக பயிற்சி நிறுவன தொடக்க விழா நடைபெற்றது
புதுச்சேரி:
மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையுடன் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து மயிலம் திறன் மேம்பாட்டுக்கழக பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சி அக்குழுமத்தின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மயிலம் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேங்கடம் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் செந்தில் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் டீன் ராஜப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.