உள்ளூர் செய்திகள்
புதுவை உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது
சுப்ரீம் கோர்ட்டு தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை புதுவையில் நடத்த கோரி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் 4-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு கடந்த செப்டம்பரில் தேர்தல் தேதியை அறிவித்தது.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடில் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
குளறுபடிகளை சரிசெய்து தேர்தல் அறிவிப்பை வெளியிடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை அரசு ரத்து செய்தது. இதன்பின் மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.
புதுவை அரசு சார்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
ஐகோர்ட்டில் இருந்த வழக்குகளை மனுதாரர்கள் வாபஸ்பெற்றனர்.
இதனால் ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை ரத்தானது. புதுவை மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டது. நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தது.
இதனிடையே இந்திய தேர்தல் கமிஷன் புதுவை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் மாநில தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அரசு தரப்பு, தேர்தல் கமிஷன், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வாரத்துக்குள் பதிலளிக்கும் படி புதுவை அரசு, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதம் நடக்க உள்ளது. வழக்கமாக தேர்தல்கள் மே மாதம் தான் நடைபெறும். இப்போது பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்பில்லை.
பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றிலும் சிக்கல் ஏற்படும். எனவே உள்ளாட்சி தேர்தல் மேலும் சில மாதத்துக்கு தள்ளிப்போகிறது.