உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமை கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் நமச்சிவாயம், எம

மெகா வேலைவாய்ப்பு முகாம்-கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

Published On 2022-03-05 14:39 IST   |   Update On 2022-03-05 14:39:00 IST
2 நாள் மெகா வேலைவாய்ப்பு முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-புதுவை அரசு இணைந்து 2 நாள் வேலைவாய்ப்பு முகாமை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது.

நிபுணா மற்றும் சேவா இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை வாய்ப்பு முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்ட்ஸ், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன், பதிவாளர் சிவராஜ் உட்பட பலர் முகாம் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.  

முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் 10-க்கும் ஆயித்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. புதுவை கவர்னர் தமிழிசையின் முயற்சியால் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

Similar News