உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தியவரை மாறு வேடத்தில் சென்று பாகூர் போலீசார் பிடித்தனர்
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியில் ஆற்று மணலை பதுக்கி வைப்பதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏட்டு அன்பழகன் மற்றம் போலீசார் குருவிநத்தம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வாழப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் மணல் மூட்டைகளை பதுக்கி வைத்ததை போலீசார் கண்டனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்ப முயன்றனர்.
சந்தேகமடைந்த போலீ சார் ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது. இவர் ஆற்று மணலை சாக்கு மூட்டையில் கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புருஷோத்தமனின் மருமகன் நடராஜ் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.
தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வர் களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.