உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-03-04 15:37 IST   |   Update On 2022-03-04 15:37:00 IST
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
ஈரோடு :

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.  உண்ணாவிரத போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். 

மாநில துணைபொதுச் செயலாளர் ஜான் கென்னடி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பன்முகத் தலைவர் முருகையா கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். 

போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை  உடனடியாக தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 

ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வுகால பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.

Similar News