உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

4 நகராட்சிகளிலும் தி.மு.க. தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

Published On 2022-03-04 15:19 IST   |   Update On 2022-03-04 15:19:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது; அ.தி.மு.க.&2, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது; அ.தி.மு.க.-2, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும் பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பதவி ஏற்று உள்ளனர்.

இதில் அ.தி.மு.க. லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் பேரூராட்சிகளிலும், வெங்கம்பூர், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

கோபிசெட்டிப £ளையம் நகராட்சி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தி.மு.க.வுக்கே ஒதுக்கப் பட்டது. இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் என்.ஆர். நாகராஜ் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதே போல் சத்தியமங்கலம் நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜானகி ராமசாமி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜனார்த்தனன், பவானி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சிந்தூரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகிரி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பிரதீபா கோபிநாத், கொடுமுடி பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திலகவதி, ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவராக  தி.மு.க.வைச் சேர்ந்த சசிகலா, பாசூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பழனியம்மாள், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சத்யா, கிளாம்பாடி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அமுதாள்,  சென்னசமூத்திரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பத்மா, வெங்கம்பூர் பேரூராட்சி தலைவராக  சுயேட்சை உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெத்தாம்பாளையம் பேரூராட்சி தலைவராக சுயேட்சை வேட்பாளர் தங்கவேல், பெருந்துறை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வன்,  நல்லாம்பட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திவ்யா, பள்ளப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த கோகிலா, சென்னிமலை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீதேவி அசோக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தனலட்சுமி, வாணிப்புதூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சிவராஜ், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்மகன் சிவா, கெம்பநாய க்கன்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

எலத்தூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஜம்பை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆனந்த குமார், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாமணி,  அரச்சலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த விஜயகுமார், வடுகபட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த  அம்பிகாபதி விஷ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

காசிபாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த நித்யா என்கிற தமிழ்செல்வி, கூகலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயலட்சுமி, கொளப்பலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அன்பரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சலங்கப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மணிமேகலை, அத்தாணி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த புனிதவள்ளி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மகேஸ்வரி, பவானிசாகர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மோகன், ஒலகடம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வேலுச்சாமி, மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வாம்பாள். நசியனூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மோகன பிரியா, நம்பியூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மெடிக்கல் செந்தில்குமார்,  கொல்லாங்கோவில்   பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News