உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா
புதுச்சேரியில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 497 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, காரைக்காலில் ஒருவர் என 5 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் 9, ஏனாமில் 2 பேர் என 23 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 725 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 27, காரைக்காலில் 18, ஏனாமில் 2 பேர் என 47 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 52 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 94 ஆயிரத்து 726 பேர் தடுப்பூசி போட் டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.