உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர்கள் உடல்
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர்கள் உடல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர்கள் உடல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி ரெயில்வே பாலம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சம்பவத்தன்று 2 முதியவர்கள் உடல் மிதந்து கொண்டு இருப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் போன்ற விவரம் தெரியவில்லை.
ஒருவர் கருப்பு கலரில் பேண்ட் அணிந்திருந்தார். மற்றொருவர் வெள்ளை கலரில் கோடு போட்ட சட்டை பழுப்பு கலரில் கோடு போட்ட அரைக்கால் சட்டை அணிந்து இருந்தார்.
2 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வாய்காலில் தவறி விழுந்து இறந்தார்களா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.