உள்ளூர் செய்திகள்
நகராட்சி-கொம்யூன் ஊழியர்கள் போராட்டம்
நகராட்சி-கொம்யூன் ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில நகராட்சி-கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு வினாயகவேல், ஆனந்த கணபதி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பால மோகனன், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உதயகுமார், சேகர், பத்ரீஸ் தெலமாஷ், வேளாங் கண்ணிதாசன், கணேசன், பாலசுப்பிரமணியன், மாணிக்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
புதுவை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தபோராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் கலியபெருமாள் நன்றி கூறினார்.