உள்ளூர் செய்திகள்
பலியான முருகசாமி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலதிபர் பலி

Published On 2022-03-03 11:20 IST   |   Update On 2022-03-03 11:20:00 IST
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த தொழில் அதிபர் விபத்தில் பலியானார்.
புதுச்சேரி:

கோட்டக்குப்பம் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்.

இவரது மூத்த மகன் முருகசாமி  என்கிற விஜய் (வயது 40). இவர், அதே பகுதியில் ஊதுவத்தி கம்பெனி நடத்தி வந்தார். பழுதான தனது இருசக்கர வாகனத்தை புதுவையில் பழுது நீக்க கொடுத்து இருந்தார். 

இரு சக்கர வாகனத்தை  பழுது நீக்கி எடுத்துக் கொண்டு கோட்டக்குப்பம் வழியாக இடையஞ்சாவடி கிராமத்திற்கு சென்றார். 

சின்ன கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது  மாடு  திடீரென குறுக்கே சென்றது. மோட்டார் சைக்கிள்  மாட்டின் மீது மோதியதில் முருகசாமி தூக்கி வீசப்பட்டார். 

இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  முருகசாமி அதிகாலை இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து இவருடைய சகோதரர் விஷ்ணுகாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் இன்ஸ் பெக்டர் ராபின்சன், சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலதிபர் பலியான சம்பவம் இடையஞ்சாவடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News