உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

Published On 2022-03-03 08:30 IST   |   Update On 2022-03-03 08:30:00 IST
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வசந்தி. இவரது 2-வது மகள் சுவாதி (வயது 24). இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் வயிற்று வலியால் சுவாதி அவதிப்பட்டு வந்ததாகவும் இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News