உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

காரைக்கால் அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2022-03-02 16:00 IST   |   Update On 2022-03-02 16:00:00 IST
காரைக்கால் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் அகலங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது70). விவசாயம் செய்துவரும் இவர், தனது தெருவில் கார் ஓட்டி பழகி வந்தார். அப்போது, தெருவில் நின்று கொண்டிருந்த செல்லம்மாள் (76), முத்துலட்சுமி (48), புனிதா (36) ஆகிய 3 பெண்கள் மீது கார் மோதியது. இதில், 3 பேரும் காயம் அடைந்தனர். அருகில் உள்ளோர், 3 பேரையும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார், காரை தவறாக ஓட்டிய முருகையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News