உள்ளூர் செய்திகள்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரிவிழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தேன், பால், பன்னீர்,மாவு பொடி, திரவிய பொடி, இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது.
மேலும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் பொறியாளர் கோமகன் ஏற்பாட்டில் பரத நாட்டிய பள்ளி குழுவினரின் தனிநபர் மற்றும் குழுவாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு கங்கை கொண்ட சோழபுரம் மேம் பாட்டு குழுமம், நாட்டியாஞ்சலி குழுவினர் ஏற்பாட்டில் சென்னை ராஜலட்சுமி கல்வி நிறுவன உதவியுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலம் 7ம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
இதில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், பெங்களூர், மைசூர், சென்னை,கோயம் புத்தூர், உள்ளிட்ட பலப் பகுதிகளில் இருந்தும் பல நாட்டியப்பள்ளி கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவிகளும் நடனமாடினர்.
மேலும் நாட்டியாஞ்சலியை நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கண்டு களித்தனர்.