உள்ளூர் செய்திகள்
அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா
வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை மகா அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு யாளி வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள்நீர், விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மீனவ கிராம ஆலய கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.