உள்ளூர் செய்திகள்
புகைப்பட கண்காட்சியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்ட காட்சி.

இயற்கை உணவு பொருட்கள் விற்பனைக்கூடம்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

Published On 2022-03-02 07:18 GMT   |   Update On 2022-03-02 07:18 GMT
புதுவை கடற்கரை சாலையில் இயற்கை உணவு பொருட்கள் விற்பனைக்கூடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:

புதுவை பிரெஞ்சு ஆய்வு மையத்தில் பாரம்பரிய உணவு குறித்த கருத்தரங்கு நடந்தது. ஆய்வு மைய இயக்குனர் பிளாந்தின் ரிபேர்ட் வரவேற்றார்.  சமூக அறிவியல் துறை டெல்பின்திவே, வெங்கடசுப்பிரமணியன், சுற்றுப்புறவியல் துறை டோரிஸ் பார்போனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

 பாரம்பரிய விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. பொது மக்களிடமும் பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளது. முன்பு வீடுகளில் கத்திரி, முருங்கை, வாழை வளர்த்தனர். சிலகாலம் இந்த பழக்கம் அறவே நின்றுவிட்டது. 

இப்போது பலரும் வீடுகளில் பயிர்களை வளர்க்க தொடங்கியுள்ளனர். இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்களை விற்பனை செய்ய கடற்கரை சாலையில் ஒரு விற்பனைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாரம்பரிய விவசாயம் பற்றி அறிய விவசாயிகளை அழைத்துச்சென்று கள ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 5 ஆண்டில் விவசாயம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இப்போது அதை சீரமைக்கும் பணியை செய்து வருகிறோம். மற்ற நாடுகளை விட பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு தெரிந்த அறிவார்ந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்கின்றனர். 

அந்த வகையில் இந்த கருத்தரங்கு புதுவை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பெண்கள் பாரம்பரிய முறையில் உணவு சமைக்க முன்வர வேண்டும். பெண்கள் சமைப்பதை குறைத்ததால் தான் ஓட்டல்கள் அதிகரித்து விட்டன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கருத்தரங்கில் துணை தூதரக அதிகாரி கரோல் ஜோஸ், நபார்டு மேலாளர் சித்தார்த்தன், நம்மாழ்வார் இயக்கை விவசாயி கள் சங்க தலைவர் ராஜவேணு கோபால், ஆத்மா சங்கம் பாக்கியவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  ஆவணி தோட்டம் பானுஸ்ரீ நன்றி கூறினார். 

தொடர்ந்து என் சமையலறை, என் உணவு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட கண்காட்சியை ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார். இன்று மாலை கீரை ஆராய்ச்சி, தேனீமகரந்த ஆராய்ச்சி புத்தகம் அலையன்ஸ் பிரான்சேவில் வெளியிடப்படுகிறது. 4 மணிக்கு அனைவருக்கும் உணவு கிடைத்தல் பற்றிய கலந்துரையாடல் பிரெட்ரிக் லாண்டி தலைமையில் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கரிக்கலாம்பாக்கத்தில் பெண் விவசாயிகள், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடக்கிறது. தொடர்ந்து 6-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News