உள்ளூர் செய்திகள்
பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்கை வக்கீல் அசோக்பாபு எம்.எல்.ஏ. சந்தித்த காட்சி.

பல்கலைக்கழக துணைவேந்தருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ. சந்திப்பு

Published On 2022-03-02 10:22 IST   |   Update On 2022-03-02 10:22:00 IST
மாகி-ஏனாமில் வாடகை இடத்தில் இயங்கும் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி அனைத்து பாடப்பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தரிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:


புதுவையில் இயங்கும் மத்திய பல்லைக்கழகத்துக்கு சட்ட ஆலோசகராக வக்கீல் அசோக்பாபு எம்.எல்.ஏ. உள்ளார். 

இந்தநிலையில் வக்கீல் அசோக்பாபு எம்.எல்.ஏ. பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அசோக் பாபு எம்.எல்.ஏ. துணை வேந்தரிடம் ஆலோசனை நடத்தினார். 

மேலும் மாகி, ஏனாமில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தர் குர்மீத்சிங்கிடம் அசோக் பாபு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் குர்மீத்சிங் உறுதி அளித்தார்.

Similar News