உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வியாபாரிகளுக்கு லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-03-02 10:08 IST   |   Update On 2022-03-02 10:08:00 IST
புதுவை ரங்கபிள்ளை வீதியில் வியாபாரிகளுக்கு லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை பெரியமார்க்கெட் பகுதியில் சிறு வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களை ஆசைவலையில் சிக்க வைத்து அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை சுரண்டும் வகையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.  அவ்வப்போது போலீசார் தங்களுக்கு வரும் தகவல்களை வைத்து லாட்டரி வியாபாரிகளை கைது செய்து வருகிறார்கள்.

அதுபோல் ரங்கப்பிள்ளை வீதியில் ஒருவர் சிறு வியாபாரிகளுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் ஒரு பேப்பரில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை தெரிவித்துக்கொண்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் புதுவை பிள்ளைச்சாவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராதா கிருஷ்ணன்(வயது48) என்பது தெரியவந்து. இதைடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், லாட்டரி சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News