உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோரிமேடு பகுதியில் மின் நிறுத்தம்

Published On 2022-03-02 10:01 IST   |   Update On 2022-03-02 10:01:00 IST
கோரிமேடு பகுதியில் 3-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி :

புதுவை ஜிப்மர் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சோனியா காந்தி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ராஜா அண்ணாமலை நகர், பிரிய தர்ஷினி நகர் ஒரு பகுதி, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, சுப்பையா நகர், ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், முருகேசன் நகர், முத்துலிங்கபேட், பாக்கமுடையான்பேட், குறிஞ்சி நகர் விரிவாக்கம், சேன்பால்பேட், கொட்டுப் பாளையம், புதுப்பேட் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் லாஸ்பேட்டை, செல்ல பெருமாள் பேட், நந்தா நகர், பெத்துசெட்டிபேட், மகாவீர்நகர், பாரதிநகர்,  குமரன் நகர் அன்ட் விரிவாக்கம், அசோக்நகர், அவ்வை நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன்நகர், பெசன்ட் நகர், ஏர்போர்ட் ரோடு ஒரு பகுதி, தில்லைகண்ண அம்மா நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அதே போல் வாதானூர் மின் பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை கொடாத்தூர், கே.மணவெளி, திருக்கனூர், கொண்டா ரெட்டிபாளையம், கூனிச்சம்பட்டு ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதியில்  மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

வில்லியனூர் மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்  3-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.
 
அது போல் திருபுவனை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இன்டஸ்ட் ரியல்-3 மின் பாதையில் பராமரிப்பு   பணிகள் மேற்கொள்ள இருப்பதால்  3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்டார் கோவில் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News