உள்ளூர் செய்திகள்
வீட்டு வாசலில் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயி ஆதிநாராயணன்.

வீட்டு வாசலில் பந்தல் அமைத்து காய்கறி பயிரிடும் விவசாயி

Published On 2022-03-02 09:55 IST   |   Update On 2022-03-02 09:55:00 IST
மண்ணாடிப்பட்டில் வீட்டு வாசலில் பந்தல் அமைத்து காய்கறி விவசாயம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மண்ணாடிப்பட்டு பகுதியை  சேர்ந்தவர் ஆதி நாராயணன். விவசாயியான  இவர் தனது நிலத்தில் நெல்,கரும்பு போன்றவற்றை பயிரிட்டு வருகிறார். அதேநேரத்தில் வீட்டிலும் விவசாயம் செய்யலாம் என வீட்டு வாசலில் காய்கறி விவசாயம் செய்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தி உள்ளார்.

வீட்டு வாசலில் 10-க்கு 10 அடி அளவில் பந்தல் அமைத்து மலைப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய சவ் சவ், பீன்ஸ் போன்ற காய் கறிகளை பந்தலிட்டு பயிரிட்டு வருகிறார். 

இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், பாகற்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும் பயிரிட் டுள்ளார். 

வீட்டின் வரவேற்பு பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும்  சின்ன தொட்டிகளை வைத்து காய்கறி விவசாயம் செய்து வருகிறார். 

இதுகுறித்து விவசாயி ஆதிநாராயணன் கூறியதாவது:-

வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இயற்கை யாகவும், சுத்தமாகவும் உற்பத்தி செய்கிறேன். 

இதேபோல்  தொட்டி களில் ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், முள்ளங்கி போன்ற மலைப்பிரதேச காய்கறிகளை பயிரிட்டுள்ளேன்.

விவசாயம் செய்வதற்கு நிலமில்லை  என்று கூறு வதைவிட, இருக்கும் இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும்.  

மற்றவர்களும் இதே போல வீடுகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட வேண்டும். வீட்டிலேயே நமக்கு தேவையான காய் கறிகள் பயிரிடுவதன் மூலம் விலைவாசி ஏற்றத்தின் போது  தப்பிக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News