உள்ளூர் செய்திகள்
பள்ளிகளில் அறிவியல் தின கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமலை செல்வி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசினர்.
80 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர் சாந்தி செய்திருந்தார். கண்காட்சி நிறைவில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சர்.சிவி.ராமன் அறிவியல் கோட்பாடு, அவரது அறிவியல் ஆய்வுகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செங்குட்டுவன், பவானி, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில், மின்சாரம் இல்லாத நீர் ஏற்றும் பம்பு, தானியங்கி விசிறி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, காடுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
செந்துறை அடுத்த பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடக்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பேபி முரளிகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பஞ்சாபிகேசன் செங்குட்டுவன், ஜோதிலிங்கம், வெங்கடேசன், சங்கர், ரோஸ், சிவகுமார், திருமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக பட்டதாரி ஆசிரியர் பசுபதி வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியை வளர்மதி நன்றி தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.