உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

6 பேருக்கு கொரோனா

Published On 2022-03-01 14:05 IST   |   Update On 2022-03-01 14:05:00 IST
புதுவையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி: 

புதுவையில் ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 3, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று 
வருகின்றனர். 

புதுவையில் 8, காரைக் காலில் 1, ஏனாமில் ஒருவர் என 10 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். புதுவையில் 13, காரைக்காலில் 11 பேர் என 24 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்த மாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 726 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63  ஆயிரத்து 664 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

புதுவையில் 47, காரைக்காலில் 34, ஏனாமில் 5, மாகியில் 4 பேர் என 90 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 100 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2&வது தவணை  உள்பட 15 லட்சத்து 92 ஆயிரத்து 350 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News