உள்ளூர் செய்திகள்
நலத்திட்ட உதவிகளை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்-.ஏ. வழங்கிய காட்சி.

புதுச்சேரியில் விரைவில் தி.மு.க.ஆட்சி-சிவா எம்.எல்.ஏ. தகவல்

Published On 2022-03-01 13:36 IST   |   Update On 2022-03-01 13:36:00 IST
புதுவையில் விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

தி.மு.க .தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி ஏம்பலம் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் பலராமன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

விழாவில் மாநில  அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழை குடும்பத்தின் குடும்ப பொருளாதாரத்திற்கு உதவ கறவை மாடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை  வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:& 

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆட்சி பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

அதுபோன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று புதுவை மக்களும் விரும்பி வருகின்றனர். அந்த விருப்பத்தை தெரிவிக்கும் வகையில்தான் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழ கத்தை போல் புதுவை மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி விரைவில் அமைந்து, புதுவை வளர்ச்சி பெறும். 

இவ்வாறு அவர் பேசினார்.

 விழாவில், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், வடிவேல், துணை அமைப்பாளர்கள் சண்.குமாரவேல், குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரிய நாதன், இளங்கோ, பொதுக் குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல், வேலவன், பிரபாகரன்,  அருட்செல்வி, இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி செயலாளர்கள் உருளையன் பேட்டை சக்திவேல், உப்பளம் சக்திவேல், ராஜாராமன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் சிவா எம்.எல்.ஏ.  முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Similar News