உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 18-ந் தேதி திடீரென மாயமானார். திருக்கழுக்குன்றம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கருமாரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான குமரேசன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். குமரேசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.