உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக வேலை பார்ப்பவரின் மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், சின்னபேராலி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 23ந்தேதி மாணவியின் தாயார் பணி நிமித்தமாக சென்னை சென்றுவிட்டார். இதனை அறிந்த அய்யனார் மாணவியை குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் மிரட்டியுள்ளார்.
பின்னர் மாணவியை புல்லலக்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற அய்யனார், அங்கு வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன் பிறகு நேற்று முன்தினம் (26ந்தேதி) மாணவியை சின்னபேராலிக்கு வர வழைத்து அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து நேற்று புல்லலக்கோட்டைக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றிய விவரங்கள் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அய்யனார் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.