உள்ளூர் செய்திகள்
காதலியுடன் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே காதலியுடன் திருமணம் நடக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி-அழகுராணி தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் தேவேந்திரன்,
விவசாயத்துறையில் பட்டப்படிப்பு படித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.
இதற்கிடையே அவர் உறவினரான அன்னக்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டு தேவேந்திரனின் பெற்றோர் சென்றனர்.
ஆனால் மதுப்பழக்கம் உள்ளதாக கூறி தேவேந்திரனுக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காததால் காதலியும் அவரை மணக்க சம்மதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த தேவேந்திரன், கடந்த 20-ந்தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தேவேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாயார் அழகுராணி, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.