உள்ளூர் செய்திகள்
ரேசன் அரிசியை மாவாக அறைத்து கடத்தல்
ரேசன் அரிசியை மாவாக அறைத்து கடத்திய 2 பேரிடம் விசாரணை
அரியலூர்:
அரியலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் செந்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி மாவாக அரைத்து 2300 கிலோ சட்டவிரோதமாக கடத்தப்பட்டது தெரிய வந்தது.
உடனே வாகனங்களின் உரிமையாளர்களான குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது மற்றும் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை மாவாக அரைத்து கால்நடை தீவனத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, அவர்களிடம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.