உள்ளூர் செய்திகள்
பல்லாவரம் அருகே கடையை உடைத்து பணம் கொள்ளை
பல்லாவரம் அருகே ஆவின் பால் பூத் கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பம்மலில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் பிரதான சாலையில் நான்கு ஆவின் பால் பூத்துகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் நேற்று காலையில் கடையை திறக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடையின் பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த பணம் ஐம்பதாயிரம் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, மூன்று மர்மநபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.