உள்ளூர் செய்திகள்
பல்கலைக்கழக துணைவேந்தருடன் செல்வகணபதி எம்.பி.சந்திப்பு
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை செல்வகணபதி எம்.பி. நேரில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை செல்வகணபதி எம்.பி. நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் புதுவையை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடர்வதற்கான வாய்ப்புகளை கூடுதலாக வழங்க மத்திய அரசுடன் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரை கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து புதுவையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் பல்கலைத்தின் எதிர்காலத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பன்னாட்டு தரத்திலான ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை பல்கழகத்தில் கொண்டு வர ஒத்துழைப்பு தருவதாகவும் துணைவேந்தரிடம் செல்வகணபதி எம்.பி. தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.